உள்ளாட்சி தேர்தல் – இன்று அதிமுக ஆலோசனை கூட்டம்

ள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் இன்று  நடைபெறவுள்ளது. 
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016 -ஆம் ஆண்டு முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில்  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்,துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் இன்று (நவம்பர் 6- ஆம் தேதி) ஆலோசனை நடைபெறுகிறது .