தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- பிரதமர் மோடி ..!

தமிழக பாஜக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தடைந்தார். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 65 கிலோ எடை கொண்ட மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது.

READ MORE- பிரதமர் மோடி வருகை… மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை.!

பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவு சின்னத்தை பரிசாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கினார். பின்னர் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  வணக்கம் என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கினார். இன்று பல்லடத்தில் உங்கள் மத்தியில் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள கொங்கு பகுதியானது இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது. அது மட்டுமல்லாமல் இங்கு மிகவும் ஜவுளித்துறை  துடிப்பான தொழிலாக இருந்து வருகிறது. பாஜக தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

READ MORE- ககன்யான் திட்டம்.. இந்திய வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர்..!

டெல்லியில் ஏசிஅறையில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கிறார்கள். இந்தியாவின் காற்றாலை உற்பத்திக்கு திருப்பூர் மாவட்டம் உறுதுணையாக உள்ளது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்று நம்பிக்கை உள்ளது. 2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக உள்ளது. தமிழகம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு புதிய சரித்திரத்தை படைக்க உள்ளது. அதற்கு முன்னோடியாக வரலாற்று சிறப்புமிக்க ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அது மட்டுமல்ல இந்த யாத்திரைக்கு நீங்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளீர்கள்.

READ MORE- அண்ணாமலை கடை போனியே ஆகாத கடை- ஜெயக்குமார்..!

பெயரைப் போன்று ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மக்களுக்கானது .ஆயிரக்கணக்கான மக்களின் ஆசிர்வாதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தேசியமே முதன்மை அன்று கொள்கைக்கு எடுத்துக்காட்டு ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை, அண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் இளைஞர்கள்  பெரும் ஆதரவு அளிக்கின்றனர் என தெரிவித்தார்.

author avatar
murugan

Leave a Comment