நீங்க கொஞ்சம் விஸ்வாசமா இருங்க ..கேப்டன் ரோஹித் சொல்வது சரிதான் – சுனில் காவஸ்கர்

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, இந்திய அணியின் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பங்காற்றாமல் இருப்பதால் அதை ரோஹித் ஷர்மாவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் மறைமுகமாக விமர்சித்து பேசி இருந்தார்கள்.

இந்த 4-வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பத்திர்கையாளர்களிடம் கூறுகையில், ” டெஸ்ட் கிரிக்கெட் என்பது மிகவும் கடினமான ஃபார்மேட். இந்த பார்மட்டில் நீங்கள் வெற்றி பெற விரும்பினால். இந்த கடினமான ஃபார்மேட்டில் நீங்கள் சிறந்து விளங்க விரும்பினால், உங்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற பசி தேவை.

இது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த பசியில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே நாங்கள் வாய்ப்பு கொடுப்போம். அந்த பசி இல்லாத வீரர்களையோ,  இந்த ஃபார்மேட்டை விரும்பாத வீரர்களையோ நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.  நாங்களும் அதை தெரிந்து கொள்கிறோம்”, என்று போட்டிக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது ரோஹித் சர்மா கூறியிருந்தார்.

Read More :- இனிமேல் இதுதான் சம்பளம் ..! இஷான் – ஷ்ரேயஷால் இளம் வீரர்கள் உற்சாகம் ..!

இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர், ” ரோஹித் கூறியதை நான் ஏற்கிறேன், அவர் சொல்வது முற்றிலும் சரி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புபவர்களை நீங்கள் பார்த்து தேர்வு செய்யுங்கள். இதை நான் பல வருடங்களாக கூறி வருகிறேன். இந்திய கிரிக்கெட்டினால் தான் இந்திய அணியினர் வாழ்கிறார்கள்.

அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கை மற்றும் தொழில் அனைத்தும் இந்திய கிரிக்கெட் மட்டும் தான் காரணம். அவர்களுக்கு கிடைத்த பணமும், புகழும், அங்கீகாரமும் இந்திய கிரிக்கெட் மட்டும் தான். எனவே இந்திய கிரிக்கெட்டின் மீது கொஞ்சம் விசுவாசமாக இருங்கள்.

Read More :- விடைபெறுகிறேன்.. நன்றி.! கண்கலங்கிய நியூசிலாந்து வீரர்.!

எந்த காரணத்தாலும் அந்த விஸ்வாசத்தை இழக்காதீர்கள். நான் விளையாட மாட்டேன் என்று சொன்னால், முயற்சி செய்ய தயாராக இருப்பவர்களுக்கு மட்டும் வாய்ப்புகள் வழங்கப்படும். மேலும், தேர்வாளர்களின் அணுகுமுறையும் ரோஹித் ஷர்மாவின் சிந்தனை போல இருந்தால் இந்திய கிரிக்கெட்டுக்கே அது நல்லதாகும் என்று கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் டாக்கில் கூறியிருந்தார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment