அண்ணாமலை கடை போனியே ஆகாத கடை- ஜெயக்குமார்..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக MLA க்கள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியை சார்ந்த பலர் அதிமுகவில் ஐக்கியமாகக் கொண்டுள்ளனர். நாங்கள் பாஜக மாதிரி  வலை விரித்து பிடிக்கவில்லை, நேற்று கூட அண்ணாமலை கடை விதித்தார்.  அண்ணாமலை என்ற வியாபாரி கடை விதித்தார். அந்த கடையில் வாங்குவதற்கு ஆள் யாரும் வரவில்லை, அந்த கடைக்கும் யாரும் வரவில்லை. அது போனியாக ஆகாத கடை, அண்ணாமலை கடை போனியா ஆகாத கடை என விமர்சனம் செய்தார்.

READ MORE- அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள்!

பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இன்று இணைய உள்ளதாக செய்தியாளர் சந்திப்பின்போது அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார். இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பாஜக எம்எல்ஏ 2 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளனர் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan

Leave a Comment