கள்ளக்குறிச்சி; பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணை!

பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்ட, கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆக.26-ல் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்தும், பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மாணவி தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment