விதியை மீறிய பும்ராவிற்கு எதிராக ஐசிசி அதிரடி…!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. அதே நேரத்தில், ஒரு புறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையும் பாதிக்கப்பட்டது.

மறுபுறம் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகள் 2.12ஐ மீறியதாக ஜஸ்பிரித் பும்ரா  மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸின் 81-வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது.

கே.எல் ராகுல் & ஜடேஜா 2-வது டெஸ்டில் இருந்து விலகல்- பிசிசிஐ அறிவிப்பு..!

ஐசிசி நடத்தை விதியின் பிரிவு 2.12 இன் படி, ஒரு வீரர் மற்றொரு வீரர் அல்லது நடுவருடன் உடல் தொடர்பு வைத்தால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்படுவார். அதன்படி 81-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தை  ஒல்லி போப் அடித்து விட்டு சிங்கிள் எடுக்க ஓடியபோது பாதையில் பும்ரா வேண்டுமென்றே அவரை தடுத்ததாக கூறப்படுகிறது. பும்ராவின் தோள்பட்டை ஒல்லி போப் மீது லேசாக உரசி விட்டது.

இந்த குற்றசாட்டை கள நடுவர்கள் பால் ரைபிள், கிறிஸ் காஃப்னி, மூன்றாவது நடுவர் மரேஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோர்  முன்வைத்தனர்.  பொதுவாக இந்த விதிமுறையை மீறுபவருக்கு 50% அபராதம் மற்றும் 2 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும். ஜஸ்பிரித் பும்ரா கடந்த 24 மாதங்களில்  எந்த விதிமுறைகளையும் மீறாமல் விளையாடியதல் அபராதமின்றி 1 கருப்புப்புள்ளி மட்டும் வழங்குவதாக  ஐசிசி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த குற்றத்தை  பும்ரா ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடத்தப்படாது என ஐசிசி கூறியுள்ளது.

 

author avatar
murugan

Leave a Comment