1900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், 1900 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கேமிங் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொள்கின்றனர். தொழில்நுட்பத் துறையானது கடினமான பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று போன்றவை காரணமாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது. இதன் விளைவாக 2023 இல் அதிகரித்த பணிநீக்கம் இந்தாண்டும் தொடர்கிறது.

அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையை  இழக்கின்றனர். அப்பிரிவில் சுமார் 22,000 பேர் பணிபுரிகின்றனர்.

கடத்தப்பட்ட ஈரான் கப்பலை மீட்ட இந்திய கடற்படை..!

மைக்ரோசாஃப்ட் கேமிங் தலைமை நிர்வாக அதிகாரி பில் ஸ்பென்சர் வெளியிட்ட தகவல் இதை உறுதி செய்துள்ளது. அதே போன்று, உலகப் புகழ்பெற்ற மற்றொரு நிறுவனமான இ-பே தனது ஊழியர்களில் 1000 பேரை பணிநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment