உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை இழந்த எலான் மஸ்க்..!

உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். அதன்படி, பெர்னார்ட் அர்னால்ட், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார். ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான Louis Vuitton (LVMH) சி.இ.ஓ பெர்னார்ட் அர்னால்ட் உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்கை முந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் எலான் மஸ்கை முந்தி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதனால், எலான் மஸ்க் 2-வது இடத்தில் இருந்து வந்தார். இதையடுத்து டெஸ்டாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் மீண்டும் முதல் இடத்துக்கு வந்தார் மஸ்க், பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.

1900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

இந்த நிலையில் தான் தற்போது பணக்காரர்களில் பட்டியலில் முதல் இடத்திற்கு பெர்னார்ட் அர்னால்ட் மீண்டும் வந்துள்ளார். எலான் மஸ்கின் கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்கு தொடர்ந்து சரிவை கண்டு வரும் அதே வேளையில் பெர்னார்ட் அர்னால்ட் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்தில் இருக்கிறது. தற்போது, அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 204.5 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment