ஜப்பானில் 2 லட்சம் இந்திய மென்பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

ஜப்பான் அரசு 2 லட்சம் இந்திய மென்பொறியாளர்களை, தங்கள் நாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியமர்த்த  திட்டமிட்டுள்ளது.

ஐதராபத்தில் நடந்த கருத்தரங்கில் ஜப்பானில் உள்ள வெளிநாட்டு வர்த்தக அமைப்பு என்ற அரசு நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷிகெகி மேடா (Shigeki Maeda),  பேசினார்.

அப்போது, ஜப்பானில் 9 லட்சத்து 20 ஆயிரம் மென்பொறியாளர்கள் பணிபுரிந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். மேலும் 2 லட்சம் மென்பொறியாளர்கள் உடனடியாக பணியமர்த்தப்படுவதற்கான தேவை இருப்பதாக மேடா குறிப்பிட்டார்.

இதற்காக ஐதராபாத்தில் உள்ள மென்பொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஜப்பான் நிறுவனங்கள் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், திறமையான மென்பொறியாளர்கள் ஜப்பானிலேயே தங்க அனுமதிக்கும் கிரீன் கார்டு வழங்கவும் அந்நாட்டு அரசு முன்வந்திருப்பதாக ஷிகெகி மேடா கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment