தளபதி 68 படத்தில் இணைந்த சுந்தர் சி பட நடிகை! யார் தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தளபதி 68’ . இது நடிகர் விஜயின் 68-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பிரசன்னா, பிரபுதேவா, லைலா, ஸ்னேகா, வைபவ், பிரேம் ஜி, மோகன், மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கான பூஜை வீடியோ வெளியாகும் போதே படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. இருந்தாலும் இன்னும் சில பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து வருகிறார்கள்.

மீண்டும் கழுகு பெயரை பயன்படுத்தி விஜய்யை சீண்டிய ரஜினிகாந்த்.!

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்த திரைபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பாடகர் யுகேந்திரன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.  அந்த தகவலை தொடர்ந்து தற்போது கிடைத்து இருக்க கூடிய தகவல் என்னவென்றால், தளபதி 68 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இளம் நடிகையான மாளவிகா சர்மா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் இதற்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நெலா டிக்கெட், ரெட், ஹரோம் ஹரா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு தற்போது தளபதி 68 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.