சமூக நீதி காக்கவும் ,அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதி வெளியிடப்படுகிறது -முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு மசோதாவை  தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால்  தமிழக ஆளுநர் இதுவரை  இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை .

மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதினார்.இதற்கு பதில் அளித்து ஆளுநர் எழுதிய கடிதத்தில்,   7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை. நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

இதனிடையே  தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசானையை வெளியிட்டது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.