அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த என்ன தடை? உயர்நீதிமன்றம் கேள்வி!

அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த என்ன தடை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு அரியார் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என கூறியதுடன், நீதிமன்றத்தை கேலிக்குத்தக்க வேண்டாம் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் பின் அரியர் தேர்வுகளை ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை என பல்கலைக்கழக மானிய குழுவினர் தெரிவித்துள்ளனர். இறுதிபருவ தேர்வை ஆன்லைனில் நடத்துவது போல அரியர் தேர்வை நடத்துவதற்கு என்ன தடை என கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக கூடுதல் பதில் மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, நவம்பர் 25 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

author avatar
Rebekal