Thalapathy 69 : அண்ணா நம்ம படத்துல ஷாருக்கான்…விஜய்க்கு தூண்டில் போடும் அட்லீ?

Thalapathy 69 விஜயின் 69-வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற கேள்விக்கு தான் இன்னும் விடை கிடைக்காமல் இருக்கிறது என்றே கூறலாம். ஒரு பக்கம் இயக்குனர் எச்,வினோத் தான் விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்குவார் இது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குவார் என்றும் தகவல்கள் பரவியது.

READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்!

இந்த நிலையில், இதில் திடீர் ட்வீஸ்ட்டாக விஜயின் 69-வது திரைப்படத்தினை அட்லீ இயக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாம். சமீபத்தில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து முக்கியமான நபரான கண்ணன் என்பவரும், இயக்குனர் அட்லீயும் சேர்ந்து விஜய்யை ரகசியமாக சந்தித்து இருக்கிறார்களாம்.இந்த சந்திப்பு தளபதி 69 படத்தை பற்றி தானாம் .

READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

விஜய்யை சந்தித்து அட்லீ ஒரு கதை ஒன்றை கூறியிருக்கிறாராம். அந்த கதையையும் விஜய் கேட்டு இருக்கிறாராம். அது மட்டுமின்றி, படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஒரு முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். ஷாருக்கானும் விஜயின் 69-வது திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

Read More- பட்ஜெட்டை தாண்டி சென்ற ‘அமரன்’! பணத்தை அள்ள கமல்ஹாசன் போட்ட பக்கா பிளான்!

SK23

இருப்பினும் விஜய் இன்னும் சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. உண்மையில் விஜயின் 69-வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார்  என்பதற்கான அறிவிப்பு வந்தால் மட்டும் தான் தெரிய வரும். விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment