வியாழனன்று விண்ணில் பாய்கிறது…!! ஐஆர்என்எஸ்எஸ்-1 செயற்கைகோள்…!!!

போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தொழில்நுட்பங்களை வழங்க உதவும் IRNSS-1i செயற்கைக்கோளை, PSLV-C41 ராக்கெட் மூலம், வியாழக்கிழமையன்று, இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு இணையாக நாவிக் (Navic) தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது.

இந்த செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வருகிற வியாழக்கிழமை அதிகாலை 4.04 மணியளவில், PSLV-C41 ராக்கெட் மூலம், விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட 19 நிமிடங்கள் 20 வினாடிகளில் IRNSS-1i செயற்கைகோள், புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.

இதனையடுத்து நாவிக் தொழில்நுட்பத்தை வழங்கும் 7 செயற்கைக்கோள்களில், முதல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1A செயற்கைக்கோள், 2013ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 6 செயற்கைக்கோள்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் செலுத்தப்பட்டு, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. இந்நிலையில் ஐஆர்என்எஸ்எஸ்-1A செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த அணுசக்தி கடிகாரம் திடீரென பழுதானது.

இதனையடுத்து பழுதான செயற்கைக்கோளுக்கு மாற்றாக ஐஆர்என்எஸ்எஸ்-1H செயற்கைக்கோள், கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், இந்த செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த நிலையில், அந்த செயற்கைகோளை மூடியிருந்த வெப்பத்தகடு சரியாக பிரியாத காரணத்தால், செயற்கைகோள் வெளிவருவதற்கு தடை ஏற்பட்டு, அந்த முயற்சி தோல்வியை தழுவியது. இதனையடுத்து, ஆயிரத்து 425 கிலோ எடையில் மீண்டும் ஐஆர்என்எஸ்எஸ்-1i என்ற பெயரில் செயற்கைக்கோள் உருவாக்க பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment