IPL 2018:இந்த ஆண்டு ஐபிஎல் செம ..! திருச்சி, கோவை, திருநெல்வேலியில் ஐபிஎல் ஒளிபரப்பு…!மிஸ் பண்ணிறாதீங்க …!

மும்பையில் ஐபிஎல் டி20 சீசன்-11 தொடர்  நாளை தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க முடியாத ரசிகர்களுக்காக ‘ஐபிஎல் ரசிகர்கள் பூங்கா’ என்ற வசதி செய்து தரப்படுகிறது. போட்டிகள் நடக்காத நகரங்களில் உள்ள விளையாட்டு, கண்காட்சி திடல்களில் இந்த ‘ஐபிஎல் ரசிகர்கள் பூங்கா’ அமைக்கப்படுகின்றன.

ஐபிஎல் ரசிகர்கள் பூங்காங்கள் இந்த ஆண்டு தமிழகத்தின் திருச்சி, கோவை, திருநெல்வேலி மற்றும் திருப்பதி, திருவனந்தபுரம் உட்பட 28 நகரங்களில்  அமைக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் திரையிட உள்ளனர். குவாலிபயர், எலிமினேட்டர் சுற்று போட்டிகள் வாரங்கல், பெல்காம் உட்பட 4 நகரங்களிலும், இறுதிப்போட்டி நாக்பூர், மங்களூர் உட்பட 4 நகரங்களிலும் அகன்ற திரையில் ஒளிபரப்பப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பூங்காவுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்.

போட்டிகளை பார்க்க கட்டணம் வசூலிக்கபடுவதில்லை. உணவு, தண்ணீர் ஆகியவை உள்ளேயே விற்கப்படும். திருநெல்வேலி பொருட்காட்சி திடலில் நாளை மும்பை-சென்னை போட்டியும், ஏப்.8ம் தேதி பஞ்சாப்-டெல்லி , கொல்கத்தா-பெங்களூர் அணிகள் மோதும் போட்டிகளும் ஒளி பரப்பப்படும்.

திருச்சி நேஷனல் கல்லூரி விளையாட்டு திடலில் ஏப்.21ம் தேதி கொல்கத்தா- பஞ்சாப், பெங்களூர்-டெல்லி ேபாட்டிகளும், ஏப்.22ம் தேதி ஐதராபாத்-சென்னை, ராஜஸ்தான்-மும்பை அணிகள் மோதும் ேபாட்டிகளும் ஒளிபரப்பாகும். கோவை பிஎஸ்ஜி கல்லூரி திடலில் மே 5ம் தேதி சென்னை-பெங்களூர், ஐதராபாத்-டெல்லி மோதும் போட்டிகளும், மே 6ம் தேதி மும்பை-கொல்கத்தா, பஞ்சாப்- ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னை உதயம் தியேட்டரில்  ஒளிபரப்ப அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால், ஏற்கெனவே ரிலீஸ் செய்த படங்களையே மறுபடியும் திரையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னை உதயம் தியேட்டரில் ஒளிபரப்ப அனுமதிக்கும்படி கேட்டு சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தியேட்டர் மேலாளர் ஹரிஹரனிடம் பேசினேன்.

“கடந்த மார்ச் மாதத்தில் இருந்து படங்கள் எதுவும் ரிலீஸாகதால், தியேட்டருக்கு கூட்டம் வருவதே இல்லை. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பிரச்சினை எப்போது முடியும், படங்கள் எப்போது ரிலீஸாகும் எனத் தெரியவில்லை.

எனவேதான், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப முடிவு செய்தோம். அதற்கான தொழில்நுட்ப வசதிகளும் எங்களிடம் உள்ளன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்ப அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அனுமதி கேட்டு சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் அனுமதி அளித்த பிறகுதான் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும். சென்னை மட்டுமின்றி வெளிமாநிலங்களில் நடைபெறும் போட்டிகளும் ஒளிபரப்பப்படும்” என்கிறார் ஹரிஹரன்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment