ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, 5 எம்.பி.க்களுள் ராஜினாமா…!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் 5 பேர், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம், ராஜினாமா கடிதம் வழங்கினர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, 5 எம்.பி.க்களும் ராஜினாமா செய்தனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி ராஜினாமா. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம், தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் மிதுன் ரெட்டி.

கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு பெரும்பாலான நாட்கள் முடங்கின. விவாதங்கள் எதுவும் நடத்தப்படாமல் நிதி மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். கட்சி. இந்த கட்சி 5 மக்களவை உறுப்பினர்கள் தங்களது ராஜிநாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வழங்குகின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment