‘வாக்களிக்க அழைப்பிதழ்’ – திருமண அழைப்பிதழ் போல நோட்டீஸ்…!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில், 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல நோட்டிஸ் அச்சடித்து, நூதன முறையில், அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற  உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும்  என்றும், பணத்திற்கு உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என்றும் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில், 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல நோட்டிஸ் அச்சடித்து, நூதன முறையில், அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த அழைப்பிதழில், வரதட்சணை வாங்குவதும், பெறுவதும் குற்றம் எனது போல, ஓட்டுக்கு பணம் வாக்குவதும் குற்றம் என  அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதனை வாங்கி படிக்கும் மக்களுக்கு, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.