எனது வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்துவிட்டேன்., தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் – கமல்

எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்பணித்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மயய்ம் கட்சி, சமக, ஐஜேகே என சில கட்சிகளை இணைத்துக் கொண்டு முதல்வர் வேட்பாளராக களமிறங்கிவிட்டார். மநீம சார்பில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பாக முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி்யில் பாஜக, காங்கிரேஸை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், வரும் தேர்தலில் தோற்றால் அரசியலிலிருந்து விலகி விடுவீர்களா என்ற கேள்விக்கு, இல்லை என்று கூறி எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்பணித்துள்ளேன் என்றும் தொடர்ந்து அரசியல் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லவர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தேன், என்று ரஜினி அரசியலுக்கு வராத குறித்தும் பேசியுள்ளார். அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நல்ல முன்னுதாரணம், அதேபோல் திமுக, அதிமுகவில் சில நல்லவர்களும் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்