#BREAKING: ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து விசாரிக்க விசாரணை குழு – முதல்வர்..!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை தியாகராயர் நகரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கியதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால் தி.நகரில் மழைநீர் அதிகளவில் தேங்கியது.

இது அதிமுக செய்த கோளாறு எனவே ஸ்மார்ட் சிட்டி பணியின் போது பல விதிமீறல் நடைபெற்றுள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என அறிவித்தார்.

 

author avatar
murugan