600க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்ய இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள் அறிவிப்பு!

இந்த மாதம் 600க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள்  ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன. பிராட் (Pratt) மற்றும் விட்னி (Whitney) எஞ்சின்கள் பொருத்தப்பட்ட ஏ 320 நியோ (A320neo) வகை விமானங்கள் அடிக்கடி எஞ்சின் கோளாறால் தரையிறக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த வகை விமானங்களை இயக்குவதை நிறுத்துமாறு, விமானப் போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த மாதம் இண்டிகோ நிறுவனம் 488 விமானங்களையும் கோ ஏர் நிறுவனம் 138 விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment