இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன் – டொனால்ட் டிரம்ப்

தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நாட்டு மக்களிடையே  ஜோ பைடன் உரையாற்றிய நிலையில் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன்.தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.