மிஷ்கின் ஒரு சைக்கோனு நினைச்சேன்! விஜய் சேதுபதி ஓபன் டாக்!

மிஷ்கின் ஒரு சைக்கோனு நினைச்சேன்! விஜய் சேதுபதி ஓபன் டாக்!

vijay sethupathi mysskin

விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக மிஷ்கின் இயக்கும் படங்கள் எல்லாம் சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். எனவே, அவர் விஜய் சேதுபதியுடன் அவர் ‘ட்ரைன்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.

இந்த படத்திற்காக இணைவதற்கு முன்பு அதாவது மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தின் போது படத்தை பார்க்கவே விஜய் சேதுபதி யோசித்தாராம். மிஷ்கின் ஒரு சைக்கோ அவருடைய படத்தை பார்க்கவேண்டாம் என்று நினைத்தாராம். அதன்பிறகு தாமதமாக படத்தை பார்த்துவிட்டு படம் அருமையாக இருந்த நிலையில், மிஷ்கினை சந்திக்க நினைத்தாராம்.

அப்போது நேரில் பார்த்த போது மிஷ்கினிடமே நான் உங்களை சைக்கோ என்று நினைத்தேன். ஆனால் சைக்கோ படம் மிகவும் அருமையாக இருந்தது. தாமதமாக படத்தை பார்த்ததற்கு என்னை மன்னித்து கொள்ளுங்கள். படத்தை பார்த்துவிட்டு நான் புரிந்துகொண்ட விதம் சரியாக இருக்கிறதா என்று சொல்கிறேன் கேளுங்கள் என மிஷ்கினிடம் விஜய்சேதுபதி சொன்னாராம்.

கிட்டத்தட்ட 8 மணி நேரங்களாக தொடர்ந்து விஜய் சேதுபதி சைக்கோ படம் பற்றி பேசினாராம். பின் இயக்குனர் மிஷ்கின் தனது கையில் வைத்து இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய வாட்சை பரிசாக விஜய் சேதுபதிக்கு கொடுத்தாராம். இந்த தகவலை விஜய்சேதுபதி மகாராஜா படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய விஜய் சேதுபதி “நான் மிஷ்கினை சைக்கோ என்று நினைத்து அவர் இயக்கிய சைக்கோ படத்தை கூட பார்க்காமல் இருந்தேன். இதனை நான் அவரிடமும் சொன்னேன். அதன்பிறகு  சற்று தாமதமாக படத்தை பார்த்துவிட்டு அவரை நேரில் சந்தித்து படம் பற்றி ஒரு 8 மணி நேரம் பேசினேன். அவர் எனக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் ஒரு வாட்ச் கொடுத்தார். ஒரு படத்தை பார்த்து அவரிடம் எனக்கு வாட்ச் பரிசாக கிடைத்தது. அவருடைய இயக்கத்தில் நான் ‘ட்ரைன்’ படத்தில் நடித்து வருகிறேன். படம் நன்றாக வருகிறது” எனவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube