ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது – மு.க.ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விளைநிலங்களில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதி தந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment