மக்களவை தேர்தல் : பிற்பகல் 3 மணி நிலவரம் வரை பதிவாகியுள்ளது

மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி நிலவரம் வரை பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது.இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தற்போது மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி நிலவரம் வரை பதிவாகியுள்ளது. பீகார் – 43.40%, ஹரியானா – 51.45%, மத்திய பிரதேசம் – 52.33%, உத்தரபிரதேசம் – 43.26%, மேற்கு வங்கம் – 69.96%, ஜார்க்கண்ட் – 58.08%, டெல்லி – 42.85% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Comment