தீவிரவாதிகளை கொல்லக்கூட அனுமதி பெறவேண்டுமா?….எதிர் கட்சிகளுக்கு பிரதமர் மோடி காட்டமாக கேள்வி…..

ஈவு இரக்கம் இல்லாத மனித நேயம் அற்ற  தீவிரவாதிகளை களை எடுக்க  கூட தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என யாராவது  கூறுவார்களா? என நாட்டின்  பிரதமர் நரேந்திர  மோடி, எதிர்க்கட்சியினரை இவ்விவகாரம் குறித்து  கடுமையாக தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இந்நிலையில்,தற்போது  7-ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் நரேந்திரமோடி தீவிரம் காட்டி வருகிறார்.

Image result for terrorist

இவர்  உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற  பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், தன் மீதும், தனது அரசின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கை  நாளுக்கு, நாள் மக்களிடம்   அதிகரித்து வருவதால், எதிர்க்கட்சிகள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக,பிரதமர்  மோடி குறிப்பிட்டார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நமது ராணுவ வீரர்களுக்கு, முன்னால், வெடிகுண்டுகளோடும், துப்பாக்கிகளோடும் தீவிரவாதிகள் நிற்கின்றனர்.

Image result for MODI

அப்போது, அவர்களை தாக்கி அழிக்க,இராணுவம் தேர்தல் ஆணையத்திடம் சென்று, நமது ராணுவ வீரர்கள் அனுமதி கேட்க வேண்டுமா? என்றார். ஒருவேளை எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் சென்று அனுமதி வாங்குமாறு கூறுவார்களோ? என்றும் பிரதமர் நரேந்திர மோடி  எதிர்கட்சிகளிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj

Leave a Comment