பப்ஜி மதன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. இதுகுறித்து சென்னை  சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பப்ஜி மதனை போலீசார் தேடி வந்த நிலையில், போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர்.

பின் பப்ஜி மதன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவிற்கு மட்டும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து, அவர்கள் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி  பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது மிகவும் ஆபத்தான விவகாரம் என்பதால் தற்போது எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி பப்ஜி மதன் மனுவை 4 வாரங்களுக்கு ஓத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

author avatar
murugan