ரம்மி, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ்.!

தமிழகத்தில் நிகழ்ந்த 17 தற்கொலைகள் தொடர்பாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதிலளிக்க சிபிசிஐடி போலீசார் அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் குறித்து பல்வேறு வழக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 17 வழக்குகளை விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக … Read more

பப்ஜி, ஃப்ரீ ஃபயர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டியே தீருவோம் – உயர் நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களையே மறந்துவிட்டனர் என நீதிபதி வேதனை. பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், தடை விதிக்கப்பட்ட பின்னரும் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீருவோம். இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்று தெரிவித்த மதுரை கிளை நீதிபதிகள், விபிஎன் செயலியை … Read more

மீண்டும் கூகுளிலிருந்து தூக்கப்பட்டது இந்தியன் பப்ஜி.!

நேற்று மாலை , பாதுகாப்பு காரணங்களால் இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுள் ஆப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி பல்வேறு சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதனை தொடர்ந்து அந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. அதில் இந்தியாவில் அதிகம் பயனர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பல இளைஞர்களால் கவரப்பட்ட செயலி தான் பப்ஜி. இந்த செயலி மறு உருவாக்கம் … Read more

பப்ஜி மதன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாக பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. இதுகுறித்து சென்னை  சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பப்ஜி மதனை போலீசார் தேடி வந்த நிலையில், போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர். பின் பப்ஜி மதன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை … Read more

தந்தை வீடுகட்ட சேர்த்து வைத்திருந்த ரூ.8 லட்சம் பணம்..! பப்ஜி விளையாட்டிற்காக திருடிய மகன்கள்..!

தந்தை வீடுகட்ட சேர்த்து வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை எடுத்து, பப்ஜி விளையாட்டிற்காக செலவிட்ட மகன்கள்.  சென்னை தேனாம்பேட்டையில், மளிகை கடை நடத்தி வருபவர் நடராஜன். இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த மொபைல் போனில், தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை VPN மூலமாக விளையாடி வந்தனர்.  இந்நிலையில்,நடராஜன் வீடு வாங்குவதற்காக சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.8 … Read more

‘இனிமே வீட்டுக்கு வரமாட்டேன், குட்பை’ – தடை செய்யப்பட்ட பப்ஜி கேமால் பறிபோன 10 லட்சம்…!

தடைசெய்யப்பட்ட பப்ஜி  கேமை விளையாட, தாயாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை பயன்படுத்திய சிறுவன்.  இளைஞர்களை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்தின் மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பப்ஜி ஆன்லைன் கேமானது தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் சிலர் சட்டவிரோதமாக விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் இந்த விளையாட்டால் பலர் பணத்தை இழந்தாலும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டிற்கு தெரியாமல் … Read more

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன்!

யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூப் நேரலையில் பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்து வந்த மதன் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பியதுடன் மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைமில் மதன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதன் மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, … Read more

#Breaking:பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் புகார்…!

பப்ஜி மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக 100 க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலமாக புகார் அளித்து வருகின்றனர். பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த யூ-டியூபர் மதன் தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர்.பின்னர்,அவரது சொகுசு கார்கள்,லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர், பப்ஜி மதனை ஜூலை … Read more

#BREAKING: பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் – காவல்துறை அறிவிப்பு..!

பப்ஜி மதனிடம் பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர். பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த யூ-டியூபர் மதன் நேற்று தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போதுதனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் முடக்கினர். இதனைத் தொடர்ந்து, தருமபுரியில் இருந்து நேற்று இரவு மதனை தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இந்நிலையில், … Read more

#Breaking:சென்னை அழைத்து வரப்பட்ட யூ-டியூபர் மதன்…!

பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்ட,யூ-டியூபர் மதன்,தற்போது தனிப்படை போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். பெண்களிடம் ஆபாசமாக பேசிய மற்றும் பணமோசடி புகாரில் தேடப்பட்டு வந்த,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். இதற்கிடையில்,யூ-டியூபர் மதனின் 2 சொகுசு கார்கள்,3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஆபாசமாக பேசி ரூ.4 கோடி சம்பாதித்ததால் மதனின் வங்கிக்கணக்கையும் போலீசார் … Read more