#IPL2022: பந்துவீச்சில் மிரட்டிய ஷமி, காட்டடி அடித்த ஹூடா.. வெற்றிபெறுமா குஜராத்?

ஐபிஎல் தொடரில் தற்பொழுது ஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் அணி களமிறங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4-ம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள்.

முதல் ஓவரை முகமது ஷமி வீசிய நிலையில், கே.எல்.ராகுல் கோல்டன் டக் ஆனார். அவரையடுத்து மனிஷ் பாண்டே களமிறங்க, மறுமுனையில் இருந்த டி காக் 7 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். சிறப்பாக ஆடாதொடங்கிய எவன் லீவிஸ் 10 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து 6 ரன்கள் அடித்து மனிஷ் பாண்டே, 6 ரன்கள் அடித்து வெளியேறினார்.

பவர்ப்பிலே ஓவரில் 4 விக்கெட்களை லக்னோ அணி இழந்ததை கருத்தில் கொண்ட தீபக் ஹூடா – ஆயுஷ் கூட்டணி, அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். இவர்கள் கூட்டணியில் அணியின் ஸ்கொர் மளமளவென உயரத் தொடங்கியது. தனது அரைசதத்தை நிறைவு செய்த தீபக் ஹூடா, 41 பந்துகளில் 6 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என மொத்தம் 55 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் ஆடிவந்த ஆயுஷ், 54 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சில் முகமது ஷமி, 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.