பதுகம்மா திருவிழாவில் நடனமாடிய ஆளுநர் தமிழிசை….! வீடியோ உள்ளே…!

தெலுங்கானாவில் ராஜபவனில் பதுக்கம்மா மலர் திருவிழாவின் 2-வது நாளான நேற்று, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களுடன் இணைந்து நடனம் ஆடி உள்ளார்.

தெலுங்கானாவில் பதுக்ம் மா என்ற திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா என்பது பெண்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய மலர் திருவிழா ஆகும். இத்திருவிழா நவராத்திரி சமயத்தில் தெலுங்கானாவில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் கூடியதாகும்.

இந்த நாட்களில் தெலுங்கானா பெண்கள் வீட்டையும் தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவது உண்டு. இந்த நிகழ்வின் போது ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து அதை சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி வைத்து அலங்கரிப்பர். பின்னர் இதை ஒரு பொது இடத்தில் வைத்து பெண்கள் பலரும் கூடி கும்மியடித்து பாடல் படி நடனமாடுவர்.

இந்நிலையில், தெலுங்கானாவில் ராஜ்பவனில் பதுக்கம்மா மலர் திருவிழாவின் 2-வது நாளான நேற்று, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களுடன் இணைந்து நடனம் ஆடி உள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.