கொரோனா குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்திருக்காது-அமைச்சர் செந்தில் பாலாஜி..!

  • கொரோனா தொற்று குறையாமல் இருந்திருந்தால் தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறக்க அனுமதித்திருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா அதிகம் பாதிக்காத 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா அதிகம் பாதிக்காத 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ” 27 மாவட்டங்களில் கொரோனா குறைந்ததால் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் 11 மாவட்டங்களில் கொரோனா குறையாததால் டாஸ்மாக் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா உச்சத்தில் இருந்த போது கடந்த ஆட்சியில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. கொரோனா உச்சத்தில் இருக்கும் பொழுது டாஸ்மாக் கடையை திறப்பதற்கு அப்போது திமுக எதிர்ப்பு தெரிவித்தது” என தெரிவித்துள்ளார்.