36 C
Chennai
Monday, August 2, 2021

6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு – புகழேந்தி ..!

  • 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது.
  • மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி பாமக ஆராய வேண்டும் என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தல் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் இன்று அதிமுக மூலமாக அன்புமணி எம்.பி ஆக உள்ளார். 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி முதலில் பாமக ஆராய வேண்டும்.

உங்களுடன் பயணித்து அனைத்து அதிமுக தோற்றுவிட்டது என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோவம் வரும் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டு பரிணாம வளர்ச்சியில் மாபெரும் வெற்றிகளை ஈட்டித் தந்த இயக்கம். இங்கு ஏறி நம்மளோட ஒத்துப்போகலாமே தவிர எங்களது தலைவர்களை குறை சொல்வதை நான் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நான் பதிவு செய்கிறேன்.

இதே தொழிலா போச்சு உங்களுக்கு, ஒரு கூட்டணியில் சேர்வது வெளியில் வருவது  அப்புறம் எங்களால்தான் எல்லாம் நடந்தது என்று சொல்வது. அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது தயவு செய்து இந்த கட்சியையும், தலைவர்களையும் குறை சொன்னால் அதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Latest news

Related news