முதல் டெஸ்ட் ..!ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு ….!

இந்திய அணி 323 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.     

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடர்களுக்கு பிறகு தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது.

அடிலெய்ட்டின் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ்வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடி வந்த ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது.மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 61 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.களத்தில் புஜாரா 40,ரகானே 1 ரன்களுடன் இருந்தனர். 

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் ,ஹேசல்வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில் இன்று நான்காம்  நாள் ஆட்டத்தை இந்திய  தொடங்கியது. 

 இந்திய அணி 106.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 71,ரகானே 70 ரன்கள் அடித்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் லியான் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதனால் இந்திய அணி 323 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.     

Leave a Comment