மறைந்த பிரிட்டன் இளவரசி எலிசபெத்தின் இந்திய பயணங்கள்… 3 முக்கிய நிகழ்வுகள்.!

1961 முதல் முறை, 1983 ஆம் ஆண்டு இரண்டாம் முறை, 1997ஆம் ஆண்டு கடைசி முறை என  மொத்தமாக 3 முறை இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத். 

நேற்று இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் இறப்புக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.

மறைந்த எலிசபத் ராணி இந்தியாவுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் 3 முறை வந்துள்ளார். முதலில், தனது கணவர் பிலிப்புடன் இணைந்து 1961ஆம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது மஹாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தாஜ்மஹால் சென்றுள்ளார், மும்பை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை என  முக்கிய இடத்திற்கு சென்றுள்ளார்.

தனது கணவர் உடன் இந்திய சுதந்திர தின விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். பெருந்தலைவர் காமராஜரையும் அந்த பயணத்தின் பொது எலிசபத் ராணி சந்தித்துள்ளார்.

elisepeth indra gandhi

இரண்டவது முறையாக, 1983ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார் எலிசபெத் ராணி. அப்போது பிரதமர் இந்திரா காந்தியுடன் சந்திப்பு, மேலும், டெல்லியில் அன்னை தெரேசா ஆகியோரை சந்தித்து விட்டு சென்றுள்ளார் ராணி எலிசபெத்.

மூன்றாவது முறையாக, 1997ஆம் ஆண்டு, இந்தியாவின் 50வது சுதந்திர தின விழாவில் ராணி எலிசபெத் கலந்து கொண்டார். அப்போது, அமர்தார்ஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சென்னை வந்த ராணி எலிசபெத், கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் பட துவக்க விழாவில் கலந்துகொண்டார். அந்த விழா சென்னை எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது . அங்கு அப்போதைய முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி, சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்தார். அதுதான் எலிசபத் ராணியின் கடைசி வருகையாகும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment