இங்கிலாந்து ராணிக்கு அஞ்சலி செலுத்த சென்னை நுங்கம்பாக்கம் வரலாம்… தூதரகம் முக்கிய அறிவிப்பு.!

நாளை மற்றும் திங்கள் கிழமை அன்று சென்னை , நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தில் இரங்கல் செய்தியை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். அவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் , ராணி இறந்ததை அடுத்து 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து ராணிக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு நாடுகளில் தூதரகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி , சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டின் துணை தூதரகத்தில் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (செப்டம்பர் 10 ) மற்றும் வரும் திங்கள் கிழமை (செப்டம்பர் 12) என இரண்டு நாளில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரையில் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் தங்கள் இரங்கல் செய்தியை பதிவிடலாம் என இங்கிலாந்து தூதரகம் அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment