எம்ஜிஆர் – ஜெயலலிதா நினைவிடங்களுக்கு செல்லாமல் தடுக்கவே பேனா சிலை.! இ.பி.எஸ் கடும் விமர்சனம்.!

சென்னைக்கு புதியதாக வரும் பலரும் அதிகமாக செல்வது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் தான். அதனை தடுக்கவே, கடலுக்கு நடுவே பேனா சிலை அமைக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றசாட்டு. 

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கு , 650 மீ தொலைவில் கடலுக்கு நடுவே பிரமாண்ட பேனா சிலை நிறுவ திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 81 கோடி ரூபாய் நிதியை தமிழக பொதுப்பணித்துறை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது விமர்சனத்தினை முன்வைத்தார். சட்டமன்றத்தில் தங்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதை கண்டித்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்  நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ‘ சென்னைக்கு புதியதாக வரும் பலரும் அதிகமாக செல்லும் இடம் என்றால் அது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் தான். அதனை தடுக்கவே, கடலுக்கு நடுவே பேனா சிலை அமைக்கப்படுகிறது . ‘ என குற்றம் சாட்டினார் .

மேலும், ‘ சட்டப்பேரவையில் இருந்து யாரும் எங்களை வெளியேற்றவில்லை. நாங்களாக தான் வெளியேறினோம். ‘ என பேசினார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment