அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாள் நீதிமன்ற காவல்.? நீதிமன்றத்தில் பரபரக்கும் வாதம்

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் நேற்று டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக காரணத்தால் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி பின்னர் அமலாக்கத்துறையினர் கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி, பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தபட்டது. அதன் பிறகு அவரை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர்.

Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடுகையில், மதுபானக் கொள்கை முறைவேடு குற்ற சதிகளில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகிக்கிறார். முறைகேட்டில் ஈடுடப்பட்டு கிடைத்த பணத்தை கோவா சட்டப்பேரவை தேர்தலில் செலவழித்து உள்ளனர். எல்லா நேரங்களிலும் அப்போதைய துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உடன் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மணீஷ் சிசிடியா விசாரணையில் உள்ளார். எனவே அரவிந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்கு 10 நாட்கள் நீதிமன்ற காவல் தேவை என வாதிட்டனர்.

Read More – கைது செய்யப்பட்ட பின் கெஜ்ரிவால் கூறிய வார்த்தைகள்…

இதனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர், இதனை சாதாரண பிடிவாரண்டு வழக்காக பார்க்க முடியாது. இந்த வழக்கில் ஜனநாயகத்தின் மிகப்பெரிய சிக்கல்கள் உள்ளன. அமலாக்கத்துறை வசம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லை.

சட்டவிரோதமாக தன்னிச்சையாக அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கு விசாரணை தற்போது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.