IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா ?

IPL 2024 : ஐபிஎல் சீசன்-17  தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் எதிர்ப்பார்ப்பு நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடருக்கான பட்டியலை முழுவதுமாக வெளியிடாமல் தொடரின் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Read More : – IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் ! பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

மீதம் உள்ள போட்டிக்கான அட்டவணையை நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு வெளியிடுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்த ஐபிஎல் தொடரின் அனைத்து அணிகளின் கேப்டன்களின் சம்பளத்தை பற்றி நாம் பாப்போம். இந்த ஐபிஎல் தொடரின் சிறப்பான மற்றும் வெற்றி கேப்டனாக நாம் எம்.எஸ்.தோனியையும், ரோஹித் ஷர்மாவையும் சொல்லுவோம்.

ஆனால், அவர்களுக்கு கூட இந்த அளவுக்கு சம்பளத்தை அந்த அணியின் நிர்வாகம் கொடுக்கவில்லை. நம்மை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் முதலிடத்தில் ஐதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் இருக்கிறார். ஐபிஎல் வெற்றி கேப்டனான தோனி 7-வது இடத்தில் இருக்கிறார்.

Read More :- IPL 2024 : முதல் 2 போட்டியில் SKY இல்லை ..? சென்னை அணியை தொடர்ந்து மும்பை அணிக்கு அடுத்த இடி !

ஐபிஎல் 2024 தொடரில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன்கள் பட்டியலை நாம் இப்பொது வரிசைபடி பார்க்கலாம் :-

 

வரிசை எண் கேப்டன் பெயர் சம்பளம் ஐபிஎல் அணி
1 பேட் கம்மிங்ஸ் 20.5 கோடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2 கே.எல்.ராகுல் 17 கோடி லக்னோவ் சூப்பர் ஜெய்ன்ட்ஸ்
3 ரிஷப் பண்ட் 16 கோடி டெல்லி கேபிட்டல்ஸ்
4 ஹர்திக் பாண்டியா 15 கோடி மும்பை இந்தியன்ஸ்
5 சஞ்சு சாம்சன் 14 கோடி ராஜஸ்தான் ராயல்ஸ்
6 ஷ்ரேயஸ் ஐயர் 12.25 கோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
7 எம்.எஸ்.தோனி 12 கோடி சென்னை சூப்பர் கிங்ஸ்
8 ஷிகர் தவான் 8.25 கோடி பஞ்சாப் கிங்ஸ் லெவன்
9 சூப்மன் கில் 8 கோடி குஜராத் டைட்டன்ஸ்
10 ஃபாஃப் டு பிளெசிஸ் 8 கோடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

 

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment