IPL 2024 : முதல் 2 போட்டியில் SKY இல்லை ..? சென்னை அணியை தொடர்ந்து மும்பை அணிக்கு அடுத்த இடி !

IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட போகும் முதல் 2 போய்க்கிளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யா குமார் யாதவ் விளையாட மாட்டார் என பிசிசிஐ சுற்று வட்டாரங்களின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரரான சூர்யா நன்றாக ஐபிஎல்லில் விளையாடியும் பல ஆண்டுகள் இந்திய அணியில் இடம்பெறாமலே இருந்தார்.

Read More – IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..!

அதன் பிறகு 2021-ம் ஆண்டு இங்கிலாந்து உடனான தொடர் மூலம் சர்வேதேச டி20 போட்டியின் மூலம் அறிமுகமானார்.  அதன் பிறகு அதிவேகமக 171 + ஸ்டிரைக் ரேட்டில்  2,141 ரன்களை எடுத்து (4 சதங்களும் அடங்கும்) தற்போது சர்வேதச டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கடந்த வருடம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா உடனான போட்டியில் சூர்யாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் காயத்தின் காரணமாக இவர் கடந்த சில இந்திய போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது, இவர் பெங்களூருவில் உள்ள என்சிஏவில் (NCA) தனது மறுவாழ்வுக்காக உள்ளார் எனவும் இதனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மும்பை அணி விளையாட போகும் முதல் 2 போட்டிகளில் சூர்யாகுமார் விளையாட மாட்டார் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

Read More :- ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில்  நடைபெற இருக்கும் இந்த ஆண்டின் டி20 உலகக் கோப்பையில் இந்தியா அணியில் இடம் பெறுவாரா என்பது ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பொறுத்தே அமையும். மேலும் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரை வெற்றி பாதையாக மாற்றுவதற்கும் சூர்யாவின் ஆதரவு மிகவும் தேவையாக இருக்கிறது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment