ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி

IPL: ஒரு ஆண்டில் இரண்டு முறை ஐபிஎல் தொடர்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் இரண்டு ஐபிஎல் தொடர்களை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதால், இந்த கிரிக்கெட் தொடரானது ஒரு பெரிய மாற்றத்தின் விளிம்பில் உள்ளது.

Read More – IPL 2024 : சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் தான் ..!

ஆண்டுக்கு இரண்டு முறை ஐபிஎல் தொடர்கள் வருங்காலத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ரவி சாஸ்திரி முன்னர் கூறியிருந்த நிலையில் அதற்கான திட்டமிடுதலை பிசிசிஐ தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More – ‘ தோனிக்கு அடுத்து சிஎஸ்கே கேப்டன் ரோஹித் தான் ‘- அம்பாதி ராயுடு

”2023-ல் இருந்து 2027 ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் மீடியா உரிமங்களை பொறுத்தவரையில், முதல் இரண்டு சீசன்களில் 74 ஆட்டங்களைத் திட்டமிட்டுள்ளதோடு, பின்னர் அடுத்த இரண்டாண்டுகளில் படிப்படியாக 84 ஆகவும், அதற்கடுத்து 94 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்” என ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறியதாக தி டெலிகிராப் பத்திரிக்கை மேற்கோள் காட்டியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் ஒரே ஆண்டில் இரண்டு முறை ஐபிஎல் தொடரை நடத்துவது சாத்தியம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment