அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ,சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்கு தொடரும் -மு.க.ஸ்டாலின்

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை  அரசு முறையாக விசாரித்து  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்   திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த விவகாரம் தமிழகம் மட்டும் அல்லாது நாடு முழுவதும் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் முதலமைச்சர் பழனிசாமி எதனடிப்படையில் சொன்னார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா? காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக.ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

\