ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 வரை தட்டுப்பாட்டுடன் ஊரடங்கு நீட்டிப்பு

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

இந்த உத்தரவின்படி, மால்கள், முடிதிருத்தும் கடைகள், மதம் சார்ந்த இடங்கள், ஜிம், கல்வி நிறுவனங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மாநில தலைமைச் செயலாளர் சுக்தேவ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவித்தார்.

இந்நிலையில் அங்கு கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 2,290 பேர் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை 12

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.