பெட்ரோல் ,டீசல் விலை குறைய வாய்ப்பா?

பெட்ரோல்,டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் இது குறித்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
பெட்ரோல் விலையைத் தீர்மானிப்பது 2010ஆம் ஆண்டும், டீசல் விலையைத் தீர்மானிப்பது 2014ஆம் ஆண்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து எண்ணெய் நிறுவனங்களின் கைக்குச் சென்றன. 2013-2014ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிமூலம் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில் 80ஆயிரம் கோடி ரூபாயைப் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமாகச் செலவிட்டது போக 30ஆயிரம் கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது. இந்த நிகர லாபம் 2016-2017இல் இரண்டரை லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இப்படி இருக்கும்போது பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக வரி விதித்துக் கிடைக்கும் லாபத்தை மானியமாகக் கொடுப்பதைவிட, பெட்ரோலியப் பொருட்களின் வரியை நேரடியாகவே குறைத்துவிடலாமே எனப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்…
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….

Leave a Comment