உள்ளூர் குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்படுவது தவறு – உச்சநீதிமன்றம் உத்தரவு!

உள்ளூர் குடியிருப்பு சான்று மற்றும் ஆதாரம் இல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படுவது தவறு என உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் மக்கள் கொரோனாவால் உயிர் இழப்பதை விட மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்பது தான் தற்பொழுது அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், சில இடங்களில் உள்ளூர் குடியிருப்பு அல்லது அடையாள சான்றிதழ் இருந்தால் மட்டுமே அந்தந்த மாநிலங்களில் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இரண்டு வாரங்களுக்குள் மருத்துவமனைமருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்ப்பது தொடர்பான தேசிய கொள்கைகளை வைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

மேலும் அனைத்து மாநில அரசுகளும் எந்த ஒரு நோயாளிக்கும் உள்ளூர் குடியிருப்பு அல்லது ஆதாரங்கள் கேட்டு மருத்துவமனைகளில் மருந்துகள் அல்லது படுக்கை வசதிகளை மறுக்கக் கூடாது எனவும் அனைவருக்கும் சமமாக மருத்துவமனைகளில் அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவில், மாநில அரசுகளுடன் சேர்ந்து எதிர்பாராத சூழ்நிலையில் கூட ஆக்சிஜன் முறையாக கிடைப்பதற்கு வழி வகுக்க வேண்டும் எனவும், ஆம்புலன்ஸ் வசதிகள் கூட சாமானிய மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் இன்று இரவுக்குள் முறையாக ஆக்சிஜன் கிடைக்க ஒரு முறையான வழிவகை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகாதாரப்பணியாளர்கள் இரவிலும் பகலிலும் ஓயாமல் உழைப்பதாகவும் அவர்களின் நல்வாழ்வுக்கும் ஏதேனும் ஒரு அவசர நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
Rebekal