புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்…!

புதுச்சேரியில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.

புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மொத்தம் 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டது. அதுபோல, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 14 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், விசிக ஒரு இடத்திலும் போட்டியிட்டனர். மேலும், இதுதவிர 324 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முடிவுகள் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக ரங்கசாமி அவர்கள் பொறுப்பேற்க உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.