தேர்தலில் வெற்றி.., தாயாரிடம் வாழ்த்து பெற்ற ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். முன்னாள் முதல்வர் கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் சென்ற மு.க ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோபாலபுரம் இல்லம் சென்று தாயிடம் வாழ்த்து பெற்றதையடுத்து அறிவாலயம் சென்றார் மு க ஸ்டாலின். முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு அறிவாலயத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

author avatar
murugan