பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடிப்பதா..? -ஈபிஎஸ் -ஓபிஎஸ்..!

கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம் அமைப்பதற்கு அதிமுக எதிர்ப்பு.

மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில்  கலைஞர் நினைவு நூலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கலைஞர் நினைவு நூலகம் கட்டவுள்ள இடத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் வாழ்ந்த இல்லம் உள்ளது.

இந்நிலையில், கர்னல் பென்னிகுக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி விட்டு கலைஞர் நினைவு நூலகம் கட்ட கூடாது என அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கலைஞர் நூலகம் அமைப்பதற்காக கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடிப்பது கண்டிக்கத்தக்கது. மதுரையில் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடிப்பது சரித்திரத்தைச் சிதைப்பதற்கு சமம். யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் தமிழகத்து மக்கள் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராடும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan