டெல்லியில் ஆக்ஸிஜன் செறிவூட்டி வங்கி…! நோயாளிகளுக்கு டோர் டெலிவரி-

கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி வந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்படும் – டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் பரவி வருவதால், ஆங்காங்கே மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர், உறவினர்கள் இறந்தவர்கள் உடலை வைத்துக்கொண்டு தகணம் செய்ய அழைந்து திரியும் சோகம் நிகழ்ந்து வருகிறது. மத்திய,மாநில அரசுகள் இதனைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது,மேலும் கொரோனா தாக்கத்தால் பலர் இறந்தாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக அதில் அமைகிறது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இன்று முதல் டெல்லியில் ஆக்ஸிஜன் செறிவூட்டி வங்கி அமைக்கப்படும் என்றும், மேலும் டெல்லியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 யூனிட் ஆக்ஸிஜன் செறிவூட்டப்பட்ட வங்கி அமைக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறிள்ளார். மேலும் இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் 2 மணி நேரத்திற்குள் வீடு தேடி கொண்டு வந்து தரப்படும் என்றும் ட்விட்டரில் தெறிவித்துள்ளார்.