சென்னையில் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில்  கொரோனா வைரஸால்  4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னையில், நேற்று மட்டும் 279 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 2,008 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் சூளைமேடு காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த, ரோந்து வாகன ஓட்டுனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மூலம் ரோந்து வாகனத்தில் பயணித்த காவல் ஆய்வாளருக்கு தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.