தொடரும் இழுபறி: காங்கிரஸில் 4, பாஜகவில் 3 – இன்று வெளியாக வாய்ப்பு.!

வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் நீடித்து வரும் இழுபறி, காங்கிரஸ், பாஜக போட்டியிடும் மீதமுள்ள வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நேற்று 17 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் தாராபுரம் (தனி ) – எல்.முருகன், கோவை தெற்கு – வானதி சீனிவாசன், காரைக்குடி – ஹெச்.ராஜா, அரவக்குறிச்சி – அண்ணாமலை, நாகர்கோவில் -எம்.ஆர்.காந்தி, ஆயிரம் விளக்கு -குஷ்பு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் துறைமுகம் – வினோஜ் பி.செல்வம், திருவண்ணாமலை – தணிகைவேல், மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி, திட்டக்குடி – பெரியசாமி, திருவையாறு – பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு – சரவணன், குளச்சல் -பி.ரமேஷ், திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் -டி.குப்புராமு, விருதுநகர் – பாண்டுரங்கன், திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்டவர்களும் போட்டியிடுகின்றனர்.

இதுபோன்று மறுபக்கம் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மட்டும்தான் காங்கிரஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. ஏனென்றால், வேட்பாளர் அறிவிப்பில் சிலருக்கு அதிருப்தி இருப்பதால், சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வேறு கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று காலை பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு உடனடியாக சீட் வழங்கப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை எதிர்பார்த்து பாஜக காத்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸில் வேட்பாளர் அறிவிப்பில் சில பிரச்சனை நிலவி வருகிறது. ஆகையால், காங்கிரஸில் 4, பாஜகவில் 3 என மீதமுள்ள தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்க இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்