கனிமொழி தொடர்ந்த வழக்கு -பதில் அளிக்க உத்தரவு

  • தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி  வெற்றிக்கு எதிராக  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  
  • கனிமொழி தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் சந்தானகுமார் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றார்.கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதற்கு பின் இந்த வழக்கை நிராகரிக்கோரி திமுகவின் கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் நடைபெற்ற விசாரணையில் கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.மேலும் சந்தானகுமார் மனுவை ஏற்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.இதனால் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது கனிமொழியின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது .மேலும் எதிர்மனுதாரர் சந்தானகுமார் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.